‘14 நாள் கழிச்சுதான் வெளியவே விட்டாங்க... அப்புறம் எப்படி...?’ சீனாவில் இருந்து திரும்பிய தமிழக நபர் உயிரிழப்பு...! பரபரப்பு சம்பவம்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Feb 17, 2020 10:17 AM

சீனாவில் இருந்து திரும்பிய புதுக்கோட்டையைச் சேர்ந்த நபர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

Death of a person from China due to ill health

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்தவர் சக்திகுமார். இவர் கடந்த 4-ஆம் தேதி சீனாவில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பினார். இந்நிலையில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மதுரை தனியார் ‌மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர்‌, கடந்த வெள்ளிக்கிழமை அன்று உயிரிழந்தார். அவருக்கு நுரையீரல் பாதிப்பு மற்றும் மஞ்சள் காமாலை இருந்ததாக கூறப்படுகிறது‌.

சீனாவில் இருந்து திரும்பியவர்களை கொரோனா வைரஸ் இருக்கிறதா என்று கண்காணித்து வருவதாக கூறும் நபர்களின் பட்டியலில் சக்திகுமார் பெயர் இடம்பெறவில்லை. இந்த சூழலில் சக்திகுமார் உயிரிழந்த நிகழ்வு அப்பகுதியில் ப‌ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் இருந்து வருபவர்களை தொடர் கண்காணிப்பில் வைத்திருந்தனர். 14 நாட்களுக்குப் பிறகே கொரோனா வைரஸ் தாக்குதல் இல்லை என அவரை வெளியே செல்ல அனுமதிப்பதாக அதிகாரிகள் கூறினர்,   இந்த நிலையில் இச்சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது

Tags : #CORONAVIRUS