சரியாக ‘மூடாத’ கதவால்... கண் ‘இமைக்கும்’ நேரத்தில்... பெண்ணிற்கு நேர்ந்த ‘பயங்கரம்’... ‘அதிர்ச்சி’ வீடியோ...
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளாவில் ஓடும் பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண் அதிருஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.

கேரள மாநிலம் வயநாடு அருகே ஓடும் பேருந்தில் இருந்து திடீரென பெண் பயணி ஒருவர் தவறி சாலையில் விழுந்துள்ளார். அப்போது பின்னால் வந்த பேருந்தின் ஓட்டுநர் அதை கவனித்து சரியான நேரத்தில் பேருந்தை நிறுத்தியதால் அந்தப் பெண் அதிருஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளார்.
மேலும் அந்தப் பெண் பயணித்த பேருந்தின் தானியங்கி கதவு சரியாக மூடப்படாததே விபத்திற்கு காரணம் எனக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தின்போது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான வீடியோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
