'புற்றுநோயுடன் வேலை செய்து'... 'ஏழைக் குடும்பத்தைக் காப்பாற்றும்'... 'சேலத்தில் ஒரு சிங்கப் பெண்!'...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manishankar | Jan 25, 2020 11:19 PM

கணவரையும், இரண்டு குழந்தைகளையும் காப்பாற்ற, வறுமையின் பிடியில் சிக்கியும், புற்றுநோயுடன் போராடியும் வரும் ஒரு பெண்ணின் வாழ்க்கை காண்போரை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

woman with throat cancer uplifts her poor family

சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி பகுதியைச் சேர்ந்த தம்பதி, கண்ணன் மஞ்சுளா. அவர்கள், கடந்த 2009ம் ஆண்டு பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். சில வருடங்களுக்கு முன், கட்டட பணியில் ஈடுபட்டிருந்த கண்ணனின் தலையில் பலகை விழுந்ததில், கை, கால்கள் செயலிழந்தன.

இதனால், குடும்பத்தையும், குழந்தைகளையும் காப்பாற்றுவதற்காக, மஞ்சுளா கூலி வேலைக்கு செல்ல ஆரம்பித்தார். 1500 ரூபாய் சம்பளத்தில் துப்புரவு பணியைச் செய்து வந்தார். இந்நிலையில், கடந்த 2018ம் ஆண்டு, மஞ்சுளாவுக்கு தொண்டை பகுதியில் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. அதனால், அவர் உணவு உட்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார். அவரது வயிற்றுப்பகுதியில் இன்றளவும் குழாய் மூலம் உணவு செலுத்தப்பட்டு வருகிறது. இத்தகைய நிலையிலும், அவற்றை பெரிதாக எண்ணாமல், மஞ்சுளா இன்றும் தளராமல் கூலி வேலைக்கு சென்று வருகிறார்.

உழைத்துப் பிழைக்க எண்ணியும் உடல் ஒத்துழைக்கவில்லை என்பது தான் மஞ்சுளாவின் மிகப்பெரிய வேதனையாக இருந்து வருகிறது. இவ்வளவு கடினமான வாழ்க்கை முறையிலும், உழைப்பை பெரிதென எண்ணும் மஞ்சுளாவின் கதை காண்போரை சோகத்துடன் கூடிய நெகிழ்ச்சியில் திளைத்துள்ளது.

Tags : #SALEM #WOMAN #CANCER #FAMILY