VIDEO: நட்சத்திர விடுதியில் நடந்த ‘நைட்க்ளப்’ நடனம்.. கம்பியின் உச்சியில் இருந்து தவறி விழுந்த ‘இளம்பெண்’.. அதிர்ச்சி வீடியோ..!
முகப்பு > செய்திகள் > உலகம்நைட் க்ளப் ஒன்றில் நடனம் ஆடும்போது 15 அடி உயர கம்பியில் இருந்து இளம்பெண் கீழே விழுந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸ் நகரத்தில் நட்சத்திர விடுதி ஒன்று அமைந்துள்ளது. இந்த விடுதியில் நடைபெற்ற நைட் க்ளப்பில் இரண்டு பெண்கள் நடனமாடியுள்ளனர். அப்போது 15 அடி உயர கம்பியின் உச்சியில் ஆடிக்கொண்டிருந்த ஜெனியா என்ற இளம்பெண் எதிர்பாராதவிதமாக அந்தரத்தில் கீழே விழுந்தார்.
இதில் காயமடைந்த அப்பெண், மீண்டும் எழுந்து நடனமாடினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானதை அடுத்து, ஜெனியாவிற்கு பலரும் போன் செய்தும், மெசேஜ் அனுப்பியும் நலம் விசாரித்துள்ளனர். மேலும் ஜெனியா தற்காலிக ஊழியர் என்பதால் காயத்துக்கு இழப்பீடு ஏதும் தரமுடியாது என விடுதி நிர்வாகம் மறுத்ததாக கூறப்படுகிறது.
this sums up my first str*p club experience, i really do hope she’s ok 😭😭😭😭😭😭😭😭😭 pic.twitter.com/fA4Tu1mePL
— x (@xvreae) February 9, 2020
இந்த நிலையில் விபத்து குறித்து வீடியோ வெளியிட்ட ஜெனியா, ‘உண்மையாக இந்த நிலைமையில் வீடியோ பதிவிட விரும்பவில்லை. ஆனால் கம்பியில் இருந்து கீழே விழுந்த வீடியோ வைரலானதால், பலரும் மெசேஜ் செய்து நலம் விசாரித்து வருகின்றனர். இந்த விபத்தில் எனது தாடையில் காயம் ஏற்பட்டது. பற்கள் சிலவும் உடைந்து விட்டன, கணுக்காலில் சின்ன காயம் ஏற்பட்டுள்ளது. அதனால் இதற்கு சிகிச்சை பெற்று வருகிறேன். தற்போது எல்லோருடைய மெசேஜ்களையும் பார்த்தது மகிழ்ச்சியாக உள்ளது’ என கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
