‘9வது’ மாடியில் இருந்து... ‘திடீரென’ கீழே விழுந்த ‘பெண்’... ‘கூலாக’ செய்த காரியம்... ‘பதறவைக்கும்’ வீடியோ...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Jan 26, 2020 03:45 PM

அடுக்குமாடிக் குடியிருப்பின் 9வது மாடியில் இருந்து திடீரென கீழே விழுந்த பெண் எந்தவித காயங்களுமின்றி உயிர் தப்பியுள்ளார்.

Video Woman Falls From 9th Floor Gets Up Walks Away After Landing

ரஷ்யாவில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றின் 9வது மாடியில் இருந்து பெண் ஒருவர் திடீரென கீழே விழுந்துள்ளார். ஜன்னல் வழியாக கீழே விழுந்த அந்தப் பெண் பனிக்குவியல் மீது விழுந்ததால் காயங்கள் எதுவும் இன்றி உயிர் தப்பியுள்ளார். கீழே விழுந்ததும், அந்தப் பெண் உடனடியாக எழுந்து நடந்து செல்லும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்தப் பெண் காயங்கள் எதுவுமின்றி எழுந்து நடந்து சென்றபோதும், அங்கிருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அந்தப் பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் எலும்பு முறிவு உட்பட எந்தவித காயங்களும் அவருக்கு ஏற்படவில்லை எனவும், அவர் லேசான அதிர்ச்சியில் மட்டும் இருப்பதாகக் கூறியுள்ளனர். அவர் எப்படி ஜன்னல் வழியாக கீழே விழுந்தார் என்பது தெரியாத நிலையில், போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

Tags : #CCTV #WOMAN #VIRAL