‘சாலையோரம் எரிந்த நிலையில் கிடந்த பெண்ணின் சடலம்’.. அருகே கிடந்த ‘மதுபாட்டில்கள்’.. மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளாவில் சாலையின் ஓரமாக எரிக்கப்பட்ட நிலையில் இளம்பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள குருவன்சேரி அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரமாக எரிக்கப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனே சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், எரிந்த நிலையில் சடலமாக கிடந்த பெண்ணின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.
அப்பெண்ணின் சடலத்தில் இருந்து தங்க செயின் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் சம்பவம் நடந்த இடத்தில் சில மதுபாட்டில்கள் கிடந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்ணின் அடையாளம் சரியாக தெரியாததால், மோப்ப நாய்கள் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் அப்பகுதியில் ஏதேனும் பெண் காணவில்லை என புகார் கொடுக்கப்பட்டுள்ளதாக என்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே பிரியங்கா ரெட்டி என்ற இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்நிலையில் கேரளாவிலும் அதேபோல் எரிக்கப்பட்ட நிலையில் இளம்பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
