‘ஆளில்லா ரயில்வே பிளாட்ஃபார்மில்’.. ‘தனியே சென்ற இளம் பெண்’.. பின்னால் சென்ற வாலிபர் செய்த பதைபதைப்பு சம்பவம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாசமீப காலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாட்டையே உலுக்கி வரும் நிலையில் மும்பையில் மாதுங்கா ரயில் நிலையத்தில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையின் மாதுங்கா ரயில் நிலையத்தில் ஆளில்லாத நேரத்தில் நடைமேடையில் நடந்து சென்று போன ஒரு இளம்பெண்ணிடம் அவரைப் பின்தொடர்ந்து வந்த வாலிபர் ஒருவர் அத்துமீறலில் ஈடுபட்டு அங்கிருந்து ஓடியுள்ளார்.
வெள்ளை சட்டை அணிந்தபடி, அந்தப் பெண்ணை பின்தொடர்ந்து வந்த அந்த வாலிபர் அந்தப் பெண் சற்றும் எதிர்பாராத வகையில் அந்தப் பெண்ணின் அருகே சென்று முத்தம் கொடுத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இந்த சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
எனினும் சிசிடிவி கேமரா மூலம் அடையாளம் காணப்பட்ட அந்த நபர் பல திருட்டு மற்றும் குற்ற செயல்களில் ஈடுபட்டு வருபவர் என்று தகவல் தெரிய வந்ததை அடுத்து போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.
