‘வாய்க்குள்’ வளரும் ‘முடியால்’... அவதிப்பட்ட ‘இளம்பெண்’... பரிசோதித்த மருத்துவர்களுக்கு ‘காத்திருந்த’ அதிர்ச்சி...
முகப்பு > செய்திகள் > உலகம்இளம்பெண் ஒருவர் கண் இமைகளில் வளர்வது போல பற்களின் ஈறுகளில் முடி வளரும் விநோதமான பிரச்சனையால் அவதிப்பட்டுள்ளார்.

இத்தாலியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு ஈறுகளில் கண் இமைகளில் வளர்வதுபோல முடி வளர்வதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர் அவரைத் தொடர்ந்து பரிசோதித்ததில் அந்தப் பெண் PCOS எனும் சினைப்பை பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. பொதுவாக இந்தப் பிரச்சனையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு ஆண்ட்ரோஜென் எனும் சுரப்பி அளவுக்கு அதிகமாக சுரப்பதால் உடல் மற்றும் முகத்தில் அதிகப்படியான முடி வளர்ச்சி காணப்படும். இந்நிலையில் அந்தப் பெண்ணிற்கு விநோதமாக ஈறுகளில் முடி வளர்ந்துள்ளது.
இந்த பிரச்சனை குறித்து மேலும் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் 10 ஆண்டுகளுக்கு முன்னரும் ஒரு பெண் இதே பிரச்சனையால் அவதிப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அதில், குழந்தை பிறப்பை கட்டுப்படுத்தும் மாத்திரைகள் உட்கொள்வதன் மூலம் இந்தப் பிரச்சனையை குணப்படுத்த முடியும் எனவும் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அந்தப் பெண்ணுக்கு ஈறுகளில் வளர்ந்துள்ள முடியை அகற்றிய மருத்துவர்கள் அவருடைய தசையின் ஒரு பகுதியை ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
