'அவரோட தான் வாழப்போறேன்!'... 'யாராலும் தடுக்க முடியாது'... '54 வயது பெண்ணுக்கும் 22 வயது ஆணுக்கும் உண்டான காதல்'...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manishankar | Jan 23, 2020 03:10 PM

பேரன் பேத்தி எடுத்த 54 வயது நிரம்பிய பெண்ணும், 22 வயதான வாலிபரும் காதலில் விழுந்த சம்பவம் டெல்லியில் அரங்கேறியுள்ளது.

54 year old woman falls in love with 22 year old man

டெல்லி அருகே ஆக்ராவில், வயது முதிர்ந்த பெரியவர் ஒருவர் தனது 6 பேரக் குழந்தைகளுடன் அருகில் இருக்கும் காவல் நிலையத்திற்குச் சென்று, தனது மனைவியும், 22 வயது நிரம்பிய ஒரு ஆணும் திருமணம் செய்துகொள்ளப் போவதாக குற்றம் சாட்டியுள்ளார். பிரகாஷ் நகரில் வசித்து வரும் அந்த பெண்ணும் இளைஞரும் ஒன்றரை வருடங்களாக தொடர்பில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து அந்தப் பெண் பேசுகையில், தான் அவர் காதலனுடன் சேர்ந்து வாழப்போவதாக முடிவெடுத்து விட்டதாகவும், அதை யாராலும் தடுக்க இயலாது என்றும் தெரிவித்துள்ளார். மேலும், காதல் எந்த வயதிலும் வரலாம்; அதை யாராலும் கட்டுப்படுத்த முடியாது என்றும் கூறியுள்ளார்.

அவர் காதலரான 22 வயது இளைஞரை விசாரித்த போது, அந்த பெண் தன்னுடைய நம்பிக்கைக்குரிய காதல் என்று விவரித்தார்.

இந்நிலையில், இருவர் குடும்பத்தினரும் அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவே, தங்களை சேர்ந்து வாழவிடவில்லை எனில் தற்கொலை செய்து கொள்வோம் என மிரட்டியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, போலீஸார் அந்த இளைஞரின் மீது வழக்கு பதிவு செய்தனர். அப்போதும் கூட, அவர் தன்னுடைய 54 வயது காதலியைத் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகக் கூறியுள்ளார்.

இறுதியாக அவர்கள் இருவரையும் கைவிடுவதாக, இரு குடும்பத்தினரும் முடிவு செய்தனர்.

Tags : #LOVE #WOMAN #YOUNGSTER