‘சென்னை’ கடற்கரையில் ‘திருமண’ நாள் கொண்டாட்டம்... ‘நள்ளிரவில்’ மோதிரம் மாற்றிக்கொள்ள திட்டமிட்ட தம்பதிக்கு... ‘கடைசியில்’ நேர்ந்த துயரம்...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Feb 07, 2020 05:47 PM

பாலவாக்கம் கடற்கரையில் திருமண நாளைக் கொண்டாடச் சென்றபோது இளம்பெண் ராட்சத அலையில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

Chennai Woman Drowns At Palavakkam Beach On Wedding Anniversary

வேலூரைச் சேர்ந்த விக்னேஷ் - வினிசைலா தம்பதி தங்களுடைய 2வது திருமண நாளைக் கொண்டாடுவதற்காக பாலவாக்கம் கடற்கரைக்குச் சென்றுள்ளனர். அங்கு கடலில் இறங்கி, நள்ளிரவு 12 மணிக்கு இருவரும் மோதிரம் மாற்றிக் கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

அதன்படி, அவர்கள் இருவரும் கடலில் இறங்கியபோது ராட்சத அலை வினிசைலாவை இழுத்துச் சென்றுள்ளது. இதையடுத்து போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட, அவர்கள் விரைந்து அங்கு சென்று வினிசைலாவைத் தேடியுள்ளனர். ஆனால் அவரை உயிருடன் மீட்க முடியாமல் போக, பின்னர் அவருடைய உடல் கரை ஒதுங்கியுள்ளது.

Tags : #CHENNAI #PALAVAKKAM #BEACH #WOMAN #HUSBAND