‘வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்’.. ‘திடீரென கேட்ட அலறல் சத்தம்’.. திருமணமான 8 மாதத்தில் நடந்த விபரீதம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நாகர்கோவில் அருகே திருமணம் ஆன 8 மாதத்தில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கோவில் அடுத்த ஈத்தாமொழி அருகே உள்ள காற்றாடித்தட்டு பகுதியை சேர்ந்தவர் சிவன்(28). இவரது மனைவி அர்ச்சனா (24). பெற்றோரை இழந்த அர்ச்சனா, அவரது மாமா முறை உறவினரான பரமேஸ்வரலிங்கம் என்பவரது அரவணைப்பில் வளர்ந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு சிவன் என்பவருக்கு அர்ச்சனாவை திருமணம் முடித்து வைத்துள்ளார்.
இதனை அடுத்து குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த திங்கள் கிழமை இரவும் அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அடுத்த நாள் காலை வழக்கம்போல சிவன் வேலைக்கு சென்றுள்ளார். அர்ச்சனா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது திடீரென வீட்டுக்குள் அலறல் சத்தம் கேட்டுள்ளது. உடனே அக்கம்பக்கத்தினர் பதறிபோய் அங்கு சென்று பார்த்துள்ளனர்.
அப்போது அர்ச்சனா மண்ணெண்னை ஊற்றி தீக்குளித்தது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அர்ச்சனாவை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமான 8 மாதத்தில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
