பட்டப்பகலில் கல்லூரி டீச்சரை ‘பெட்ரோல்’ ஊற்றி கொழுத்திய நபர்.. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகல்லூரி ஆசிரியை மீது பெட்ரோல் ஊற்றி நபர் ஒருவர் தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் வார்தா பகுதியை சேர்ந்த 25 வயது இளம்பெண் கல்லூரி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். வழக்கம்போல நேற்று காலை அரசு பேருந்தில் கல்லூரிக்கு சென்றுள்ளார். பேருந்தை விட்டு இறங்கி நடந்த சென்ற அவரை பின்தொடர்ந்து வந்த நபர் ஒருவர் திடீரென ஆசிரியை மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பியுள்ளார்.
இதனால் சட்டென உடல் முழுதும் தீப்பற்றி ஆசிரியை அலறித்துடித்துள்ளார். உடனே அருகில் இருந்தவர்கள் தீயை அணைத்து அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். 40 சதவீத தீக்காயங்களுடன் உள்ள அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விசாரணையில், இளம் கல்லூரி ஆசிரியை மீது தீ வைத்த நபர் விக்கி நாக்ரலே என்பதும், அவர் பால்ஹர்ஷாவில் உள்ள நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருவதும் தெரியவந்துள்ளது. மேலும் கடந்த 2 ஆண்டுகளாக ஆசிரியையை பின் தொடர்ந்து தொல்லை கொடுத்ததும் விசாரணையில் மூலம் வெளிவந்துள்ளது. பைக்கில் உள்ள பெட்ரோலை பயன்படுத்தி ஆசிரியை மீது இவர் தீ வைத்ததாக போலீசார் தெரிவித்துள்ளார்.
மேலும் இவருக்கு ஏற்கனவே திருமணமாகி 7 மாதக்குழந்தை ஒன்று இருப்பதும் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் நாக்ரலேவை கைது செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
