‘3 வருஷ க்ளோஸ் ஃப்ரண்ட்’.. ஆணாக மாறி தோழியை திருமணம் செய்த ‘இளம்பெண்’!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Feb 10, 2020 10:57 AM

இளம்பெண் ஒருவர் ஆணாக மாறி சக தோழியை திருமணம் செய்த விநோத சம்பவம் ஒடிஷா மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.

Woman undergoes sex change surgery to marry girlfriend

ஒடிஷா மாநிலம் மல்கங்கிரி மாவட்டத்தை சேர்ந்த இரண்டு இளம்பெண்கள் கடந்த 3 வருடங்களாக தோழிகளாக இருந்து வருகின்றனர். இருவரும் ஒரு தனியார் நிறுவனத்தில் ஒன்றாக பணிபுரிந்து வந்துள்ளனர். இந்த நிலையில் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளனர். அதன்படி ஒருவர் ஆணாக மாற முடிவு செய்துள்ளனர். இதற்காக இருவரில் ஒரு பெண் கடந்த ஆண்டு ஜூலை மாதம் டெல்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் ரூ.7 லட்சம் செலவில் பாலின மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை செய்தார்.

இவர்களது திருமணத்துக்கு இருவரது பெற்றோரும் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. இதனை அடுத்து கடந்த 4ம் தேதி இருவரும் திருமணம் செய்துகொண்டனர். பாலின மாற்று அறுவை சிகிச்சை, பாலின மறுசீரமைப்பு என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு நபரின் பாலியல் கட்டமைப்பை, தோற்றம் மற்றும் செயல்பாடு ஆகிய இரண்டின் அடிப்படையில் ஒரு ஆணின் தோற்றத்திற்கு பெண்ணை மாற்றும் சிகிச்சை முறை என கூறப்படுகிறது.

Tags : #WOMAN #LESBIAN #GIRLFRIEND #MARRIAGE #ODISHA