'நாயா அது... பேய்!'... 'தெரு நாய்க்காக சண்டையிட்ட பெண்கள்'... அம்மாவை இழந்த மகள்... கதறும் உறவினர்கள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manishankar | Feb 13, 2020 12:57 PM

தெருநாயை வளர்த்த பெண்ணை, நான்கு பெண்கள் தாக்கியதால் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

woman passes away after conflict with neighbours over dog

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள டோம்பிவ்லி பகுதியில் வசித்து வருபவர் நாகம்மா ஷெட்டி. உள்ளூரில் வீட்டுவேலைகள் செய்து அதன் மூலம் வரும் வருவாயைக் கொண்டு குடும்பம் நடத்தி வருகிறார். இந்நிலையில், நாகம்மா தன் வீட்டில் தெருநாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். அந்த நாய் அடிக்கடி குலைத்துக் கொண்டே இருப்பது நாகம்மாவின் வீட்டிற்கு அருகில் வசிப்பவருக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

இதைத் தொடர்ந்து, நாகம்மாவின் வீட்டுக்குச் சென்று, அந்த பெண் வாக்குவாதம் செய்துள்ளார். இருவருக்கும் இடையிலான வாக்குவாதம் முற்றவே, அந்த பக்கத்துவீட்டு பெண்மணி, நாகம்மாவின் மார்பில் பலமாக தாக்கியுள்ளார். இதனால், அருகில் இருக்கும் காவல் நிலையத்தில் இந்த சம்பவம் குறித்து நாகம்மா புகாரளித்துள்ளார்.

மேலும், புகாரைப் பெற்றுக் கொண்ட காவலர்கள் நாகம்மாவை மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறுமாறு அறிவுறுத்தியுள்ளனர். காவலர்களின் அறிவுரையை பொருட்படுத்தாமல் வீடு திரும்பிய நாகம்மா அன்று இரவு மாரடைப்பால் உயிரிழந்தார்.

தன் தாய் நாகம்மாள் உயிரிழந்ததற்கு, பக்கத்துவீட்டு பெண்மணியும் அவரோடு சேர்ந்து மேலும், 3 பெண்களும் சேர்ந்து தாக்கியதே காரணம் என்றும், அவர்கள் 4 பேரையும் கொலைவழக்கில் கைது செய்யவேண்டும் என்று நாகம்மாளின் மகள் சுனிதா கோரிக்கை வைத்துள்ளார்.

இந்நிலையில், விபத்து மரணமாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், இந்த விவகாரம் இரண்டு வழக்குகளாக பதிவு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

நாய் குரைத்து தொல்லை கொடுத்ததால், அந்த நாயை வளர்த்த பெண்மணியை பெண்களே தாக்கிய சம்பவம் அப்பகுதியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #CRIME #WOMAN #STRAYDOG #QUARREL