VIDEO: ‘திடீரென குறுக்கே வந்த பைக்’!.. ‘நேருக்கு நேர் மோதிய அரசு பேருந்துகள்’!.. ‘அலறிய பயணிகள்’.. நெஞ்சை பதறவைத்த வீடியோ..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Selvakumar | Dec 25, 2019 10:18 AM
கோவையில் அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் பலியானார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நோக்கி ஒரு அரசு பேருந்தும், மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை நோக்கி ஒரு அரசு பேருந்தும் வந்துள்ளது. மேட்டுப்பாளையம் நோக்கி வந்துகொண்டிருந்த அரசு பேருந்து குட்டையூர் அருகே வந்துகொண்டு இருந்துள்ளது. அப்போது இருசக்கர வாகனம் ஒன்று திடீரென குறுக்கே வந்துள்ளது. இதை சற்றும் எதிர்பார்க்காத ஓட்டுநர் இருசக்கர வாகனத்தின் மீது மோதி, பேருந்தை வலது புறமாக திருப்பியுள்ளார்.
அந்த சமயம் எதிர் திசையில் வந்த அரசு பேருந்து மீது நேருக்கு நேர் மோதியுள்ளது. இந்த விபத்தில் இருசக்கரத்தில் வந்த ஆண்டோஸ் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். பேருந்தில் பயணித்த சிறுவர்கள், பெண்கள் உட்பட 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். தகலவறிந்து வந்த காவல் துறையினர் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். இந்த விபத்து அப்பகுதியில் உள்ள கடையின் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
Two govt buses travelling in opposite directions collided head-on injuring 30 passengers. While those grievously injured have been admitted to CMCH, the others have been admitted to Mettupalayam GH.#Accident #GovernmentBus #Mettupalayam #GH #CMCH #TheCovaiPost pic.twitter.com/0aDQJ1TcbI
— The Covai Post (@CovaiPost) December 24, 2019
