'அசுர வேகத்தில்'.. 'நேருக்கு நேர் மோதி'.. நசிந்த சொகுசுப் பேருந்துகள்.. ஒருவர் பலி.. 20க்கும் மேற்பட்டோரின் பரிதாப கதி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Dec 21, 2019 03:28 PM
உளுந்தூர்பேட்டை அருகே அதிவேகத்தில் வந்த 2 தனியார் சொகுசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து நடந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, 20க்கும் மேலானோர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கேரளா மாநிலம், பாலக்காட்டில் இருந்து தனியார் சொகுசுப் பேருந்து சென்னை நோக்கி சென்றுகொண்டிருந்தது. இந்த பேருந்து காலையில் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையம் வந்துவிட்டு, அங்கிருந்து இணைப்பு சாலை வழியாக பைபாஸ் ரோட்டுக்கு அதிவேகமாக சென்றதாக தெரிகிறது.
அந்த சமயத்தில் சென்னையில் இருந்து உளுந்தூர் பேட்டை நோக்கி, வந்துகொண்டிருந்த தனியார் சொகுசுப்பேருந்தும், சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த, பாலக்காட்டு பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் கடும் விபத்து உண்டானது. இதில் ஒருவர் பரிதாபமாக பலியானதோடு 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த நிலையில், மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டனர்.
