கோவை '+2 மாணவியை' தூக்கிச் சென்று 'கூட்டு பலாத்காரம்'.. 3 பேர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Dec 21, 2019 05:20 PM

கடந்த மாதம் 26-ஆம் தேதி, கோவை சீரநாயக்கன் பாளையத்தில், காதலனுடன் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்த இளம் பெண்ணின் காதலரை, அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல், தாக்கிவிட்டு,  அந்த இளம் பெண்ணை மறைவான இடத்துக்கு தூக்கிக் கொண்டு சென்று கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.

Goondas Act filed in Coimbatore school girl molested case

இது தொடர்பாக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட, மணிகண்டன் (27), பப்ஸ் கார்த்தி (26), ராகுல் (21), பிரகாஷ் (22), கார்த்திகேயன் (28), நாராயண மூர்த்தி (32) ஆகிய 6 பேரில், மணிகண்டன், பப்ஸ் கார்த்தி, ராகுல் உள்ளிட்ட 3 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கு அனைத்து மகளிர் போலீசார், மாநகர போலீஸ் கமி‌ஷனர் சுமித் சரணுக்கு பரிந்துரை செய்தனர்.

இதனையடுத்து, இந்த 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்வதற்கான உத்தரவு நகல், கோவை சிறைக்கு அனுப்பப் பட்டது. எனினும் மற்ற 3 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்வதற்கான நடவடிக்கையை காவல்துறையினர் எடுத்து வருகின்றனர்.

Tags : #COIMBATORE