நேருக்கு ‘நேர்’ மோதிக்கொண்ட ‘லாரி - பேருந்து’... கோர விபத்தில் 7 ‘குழந்தைகள்’ உட்பட ‘21 பேர்’ பலியான பரிதாபம்...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Dec 23, 2019 09:03 AM

கவுதமாலாவில் பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட கோர விபத்தில் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

US Accident 21 Killed In Bus Truck Crash In Guatemala

தென் அமெரிக்க நாடான கவுதமாலாவின் கிழக்கே உள்ள குவாலன் நகர் அருகே சனிக்கிழமை அன்று பயணிகள் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்துள்ளது. அப்போது எதிரே வந்த லாரி ஒன்றின் மீது திடீரென அந்தப் பேருந்து மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் தீவிர மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த கோர விபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அவர்களில் 7 பேர் குழந்தைகள் எனவும் அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த விபத்தில் சிக்கி படுகாயமடைந்த 11 பேர் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : #ACCIDENT #US #GUATEMALA #BUS #LORRY #CHILDREN