‘கணவர்’ கண்முன்னே... நொடியில் ‘சென்னை’ பெண்ணுக்கு நடந்த ‘கோர’ விபத்து... ‘பதறவைக்கும்’ வீடியோ...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Dec 21, 2019 09:07 PM

சென்னை அண்ணா சாலையில் ஏற்பட்ட விபத்தில் மாநகரப் பேருந்து ஏறி பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

Video Chennai Woman Died In Bike MTC Bus Accident In Anna Salai

சென்னை தி.நகரைச் சேர்ந்த தம்பதி சூரியநாராயணன் (62) - எழிலரசி (59). இந்த தம்பதி நேற்று மதியம் வெளியில் சென்றுவிட்டு அண்ணா சாலை வழியாக தி.நகருக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்துள்ளனர். வாகனத்தை கணவர் சூரியநாராயணன் ஓட்ட, எழிலரசி பின்னால் அமர்ந்திருந்துள்ளார். அவர்கள் சர்ச் பார்க் பள்ளி அருகே சென்றுகொண்டிருந்தபோது முன்னால் சென்ற கார் ஒன்றை சூரியநாராயணன் முந்த முயன்றுள்ளார். அப்போது ஏற்பட்ட குழப்பத்தில் அவர் திடீரென பிரேக் பிடிக்க கணவன், மனைவி இருவரும் வாகனத்துடன் தவறி விழுந்துள்ளனர்.

இதையடுத்து நொடிப்பொழுதில் பின்னால் வந்த மாநகரப் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி எழிலரசி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் அவருடைய கணவர் லேசான சிராய்ப்புகளுடன் உயிர் தப்பியுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் எழிலரசியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விபத்தை ஏற்படுத்திய மாநகரப் பேருந்து ஓட்டுநரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தின்போது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

Tags : #ACCIDENT #MTC #CHENNAI #WOMAN #BUS #HUSBAND #WIFE