ஏறி 'இறங்கிய' தனியார் பேருந்து... 'கணவர்' கண்முன்னே... மனைவிக்கு 'நேர்ந்த' கொடூரம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Dec 23, 2019 09:47 PM

பைக்கில் இருந்து கீழே தடுமாறி விழுந்த மனைவி, கணவர் கண்முன்னே உயிரிழந்த சம்பவம் செங்கல்பட்டில் நிகழ்ந்துள்ளது.

Wife Died in front of her Husband, Police investigate

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி பகுதியை சேர்ந்த கம்ருதீன்- பாத்திமா கனி. செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பைக்கில் இருவரும் சென்றுள்ளனர். செங்கல்பட்டு சுங்கச்சாவடி அருகே சென்றபோது பைக் நிலைதடுமாறியது . அதில் இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர்.

அப்போது தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி சென்ற தனியார் பேருந்தின் பின்சக்கரம் பாத்திமா கனி மீது ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே பாத்திமா உயிரிழந்தார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் பாத்திமா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.