‘எரிக்க தேங்காய் சிறட்டை’!.. ‘4 மாசம் வீட்டுக்குள் கிடந்த சடலம்’!.. கோவை சாஃப்ட்வேர் இன்ஜீனியருக்கு நேர்ந்த கொடுமை..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Dec 23, 2019 02:05 PM

கோவையில் சாஃப்ட்வேர் இன்ஜீனியர் வீட்டுக்குள் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Coimbatore software engineer burnt body found at house

கோவை மாவட்டம் சுந்தாரபுரத்தை சேர்ந்தவர் சக்திவேல். இவர் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் சாஃப்ட்வேர் இன்ஜீனியராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பணியில் இருந்து விலகி கோவையில் மீண்டும் குடியேறியுள்ளார். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். மேலும் உறவினர்களுடனான தொடர்பையும் துண்டித்துள்ளார். நெல்லையில் உள்ள தனது அக்காவிடம் மட்டும் செல்போனில் பேசி வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 6 மாதங்களாக சக்திவேலிடம் இருந்து போன் கால்களும் வரததால் சந்தேகமடைந்த அவரது அக்கா கணவர், சக்திவேலின் கோவை வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டுக்குள் சக்திவேல் எரிந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உடனே காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சக்திவேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.

சக்திவேல் மண்ணெண்ணெய் ஊற்றி, தேங்காய் சிறட்டை மற்றும் காதிகம் கொண்டு எரிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நடந்து 4 மாதம் ஆகியிருக்கலாம் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : #CRIME #MURDER #KILLED #COIMBATORE #ENGINEER