VIDEO: ‘அசுர வேகத்தில் விழுந்த ஐஸ் கட்டி’!.. ‘நொறுங்கிய கார் கண்ணாடி’!.. பதபதைக்க வைத்த வீடியோ..!
முகப்பு > செய்திகள் > உலகம்By Selvakumar | Dec 23, 2019 03:34 PM
லாரியில் இருந்து ஜஸ் கட்டிகள் பறந்து காரின் கண்ணாடியில் விழுந்த வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து நாட்டில் உள்ள வார்விக் ஷியரில் உள்ள மருத்துவமனையில் லாரா ஸ்மித் என்ற பெண் செவிலியராக பணியாற்றி வருகிறார். அவர் தனது பணியை முடித்து காரில் வீடு திரும்பியுள்ளார். அப்போது அவருக்கு முன்னே சென்ற லாரியில் இருந்த ஜஸ் கட்டிகள் பறந்து கீழே விழுந்துகொண்டே சென்றுள்ளது.
அப்போது எதிர்பாராதவிதமாக லாரா ஸ்மித்தின் கார் கண்ணாடியில் ஐஸ் கட்டி விழுந்துள்ளது. அதிவேகத்தில் விழுந்ததால் கார் கண்ணாடி உடைந்துள்ளது. இதனால் நிலை தடுமாறிய லாரா, பின்னர் சாதூர்யமாக காரை நிறுத்தியுள்ளார். இவை அனைத்தும் காரில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
