‘300 அடி பள்ளம்’!.. ‘தாறுமாறாக ஓடி அந்தரத்தில் தொங்கிய லாரி’!.. நூலிழையில் தப்பிய டிரைவரின் திக்திக் நிமிடங்கள்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Selvakumar | Dec 23, 2019 11:51 AM
குமுளி மலைப்பாதையில் பாசிப்பயிறு ஏற்றி வந்த லாரி விபத்தில் சிக்கி 300 அடி பள்ளத்தில் தொங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் ஆலப்புழாவில் இருந்து லாரி ஒன்று பாசிப்பயிறு ஏற்றிக்கொண்டு தேனிக்கு வந்துள்ளது. அப்போது தமிழக எல்லையை ஒட்டியுள்ள குமுளி மலைப்பாதையில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி விபத்துக்குள்ளாகியுள்ளது. மேலும் சாலையின் ஓரமாக இருந்த தடுப்புகளை உடைத்துக்கொண்டு 300 அடி பள்ளத்தில் விழும் வகையில் சென்றுள்ளது.
உடனே டிரைவர் சாமர்த்தியமாக செயல்பட்டதால் முன்பக்கம் மட்டும் பள்ளத்தில் தொங்கியவாறு நின்றுள்ளது. இதனை அடுத்து மெதுவாக லாரியில் இருந்து டிரைவர் கீழே இறங்கியுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் பருப்பு மூட்டைகளை கிரேன் உதவியுடன் இறக்கி, லாரியை மீட்கும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர்.