‘ஆசையாக’ கணவரிடம் ‘ஃபோனில்’ பேசிக்கொண்டிருந்த மனைவிக்கு... ‘அடுத்த’ நொடி நடந்த பயங்கரம்... ‘பதறவைக்கும்’ சம்பவம்...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Dec 20, 2019 04:15 PM

புதுச்சேரியில் கணவருடன் செல்ஃபோனில் பேசிக்கொண்டிருந்தபோது 2வது மாடியில் இருந்து தவறி விழுந்து இளம்பெண் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Puducherry Talking To Husband On Phone Wife Falls From 2 Storey

புதுச்சேரி மாவட்டம் ஜீவானந்தபுரம் பகுதியைச் சேர்ந்த திருமலை என்பவருடைய மகள் செல்வி (22). இவருக்கும், பெரம்பலூரைச் சேர்ந்த சரவணன் என்பவருக்கும் கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது இவர்களுக்கு 8 மாதத்தில் பெண் குழந்தை ஒன்று உள்ள நிலையில், பிரவசத்திற்கு தாய் வீட்டிற்கு வந்த செல்வி பிரசவத்திற்குப் பிறகும் அங்கேயே தங்கியிருந்துள்ளார். அவருடைய கணவர் சரவணன் அவ்வப்போது வந்து அவரையும் குழந்தையையும் பார்த்துவிட்டுச் சென்றுள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் வீட்டின் 2வது மாடிக்குச் சென்ற செல்வி, தனது கணவருடன் செல்ஃபோனில் பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது அவர் குழந்தை தவழ்வது, சாப்பிடுவது, பேசுவது பற்றியெல்லாம் கணவரிடம் சந்தோஷமாகக் கூறி சிரித்துப் பேசிக்கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

கணவரிடம் பேசிக்கொண்டிருந்த சுவாரஸ்யத்தில் செல்வி தான் எங்கு நிற்கிறோம் என்பதை மறந்து, உயரம் குறைவாக இருந்த கைப்பிடிச் சுவர் அருகே நின்று பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென நிலைதடுமாறிய அவர் கைப்பிடிச் சுவரில் தடுக்கி கீழே விழுந்துள்ளார்.

2வது மாடியில் இருந்து விழுந்ததால் படுகாயம் அடைந்திருந்த அவர் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஆனால் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்ததால் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அவர் மரணத்திற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #SMARTPHONE #CCTV #PONDICHERRY #WIFE #HUSBAND #BABY #DEAD