அரசுப் பேருந்து ஓட்டுநர் உட்பட... 4 இளைஞர்களுக்கு நேர்ந்த சோகம்... புளியமரத்தில், கார் மோதி கோர விபத்து!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Dec 19, 2019 03:37 PM

பெரம்பலூர் அருகே சாலையோரத்தில் இருந்த புளிய மரத்தில் கார் மோதி, 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

2 dead including bus driver and 2 injured in car accident

கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியைச் சேர்ந்த 4 பேர், திருச்சி விமான நிலையத்திலிருந்து காரில் சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் அருகே பாடாலூர் என்ற இடத்தில் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஓட்டுநரின்  கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர புளியமரத்தில் கார் மோதி அப்பளம் போல் நொறுங்கியது. இதில், வசிஷ்டபுரம் கிராமத்தைச் சேர்ந்த அரசுப் பேருந்து ஓட்டுநரான மருதமுத்து (30) மற்றும் ஆவினங்குடி கிராமத்தை சேர்ந்த செந்தில் ராஜா (30) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் செங்கமேடு கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் (28), சதீஷ் குமார் (26) ஆகிய இருவரும் பலத்த காயம் அடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாடாலூர் போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு பெரம்பலூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து பாடாலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #ACCIDENT #DIED