கண் இமைக்கும் நேரத்தில் ‘500 அடி’ பள்ளத்திற்குள் கவிழ்ந்த ‘பேருந்து’... கோர விபத்தில் சிக்கி... ‘24 பேர்’ பலியான பயங்கரம்...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Dec 24, 2019 01:01 PM

இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து பள்ளத்திற்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.

Accident 24 Dead In Indonesia After Bus Plunges Into Ravine

இந்தோனேஷியாவின் தெற்கு சுமத்ரா மாகாண தலைநகர் பாலம்பேங் பகுதியில் நேற்று இரவு பயணிகள் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்துள்ளது. அப்போது நள்ளிரவில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய பேருந்து, சுமார் 500 அடி ஆழ பள்ளத்திற்குள் கவிழ்ந்துள்ளது.

இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 24 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் இதில் 13 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #ACCIDENT #INDONESIA #BUS #DEAD