தனியார் கல்லூரிப் பேருந்தும்... லாரியும் ஒன்றுடன் ஒன்று மோதி... மாணவிகளுக்கு நேர்ந்த சோகம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | Dec 18, 2019 02:08 PM
தருமபுரி அருகே தனியார் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம் தொப்பூரில் தனியார் கல்லூரிப் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த லாரி மீது, ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதனால் பேருந்தில் இருந்த மாணவிகள் அலறினர்.
இந்த விபத்தில் ஒரு மாணவி படுகாயங்களுடன் மீட்கப்பட்டு தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு, சிகிச்சைப் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் 2 மாணவிகளுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து விசாரணை நடைப்பெற்று வருகின்றது.
Tags : #ACCIDENT #STUDENTS
