‘பைக்கில் சென்ற சென்னை இளைஞர்களுக்கு’... ‘வழியில் கார் மோதியதில்’... ‘நிகழ்ந்தேறிய பரிதாபம்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Feb 10, 2020 11:17 PM

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் சென்னையை சேர்ந்த இளைஞர்கள் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Chennai Youth who died in Bike Car accident near Marakkanam

சென்னை ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் அப்துல் காதர் (30),  வேளச்சேரியை சேர்ந்தவர் சுரேஷ் (27). இவர்கள் 2 பேரும் ஒரே இருசக்கர வாகனத்தில் சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு இன்று சென்று கொண்டிருந்தனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கூனிமேடு பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வந்த கார் திடீரென்று இருசக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் இளைஞர்கள் இருவரும் தூக்கி வீசப்பட்டு, சிறிது நேரத்தில் துடித்துடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த மரக்காணம்  போலீசார், பலியான இளைஞர்களின்  உடல்களை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மரக்காணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து உயிரிழந்த இளைஞர்களின் குடும்பத்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைக் கேட்டு அவர்களது உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு உண்டானது.

Tags : #ACCIDENT #YOUTH #DIED #CHENNAI #VELACHERY #ADAMBAKKAM