10 நாட்களாக தூங்காமல் உழைத்த 'சீன மருத்துவர்'... திடீரென எதிர்பாராமல் நேர்ந்த துயரம்... 'ரியல் ஹீரோவுக்கு' சல்யூட் அடித்த சீன மக்கள்...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Suriyaraj | Feb 07, 2020 06:14 PM

சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து 10 நாட்களாக ஓய்வு, உரக்கமின்றி சிகிச்சையளித்து வந்த மருத்துவர் ஒருவர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சீன மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு வயது 28.

The doctor who treated people with 10 days after he died

சீனாவின் வுஹான் நகரில் உருவான கொரோனா வைரசால் இதுவரை, 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்; 28 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஆங்காங்கே தனி மருத்துவமனைகள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் ஓய்வின்றி போராடி வருகின்றனர்.

இந்த நிலையில் வுகான் நகரில் கடந்த 10 நாட்களாக, ஓய்வு உறக்கமின்றி நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வந்த, சாங் யிங்கீ என்ற, 28 வயதான இளம் மருத்துவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

நோயாளிகளைக் காக்க ஓய்வு உறக்கம் இன்றி பணியாற்றியதே அவரது இறப்புக்குக் காரணம் என, மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இவர் தான் மக்களின் உண்மையான ஹீரோ எனப் புகழ்ந்து பாராட்டி, சீன மக்கள் அனைவரும், அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Tags : #CHINA #CORONA #DOCTOR #SLEEPLESS WORK #DIED #WUHAN