'பள்ளிக்கு உறவினருடன்'... 'இருசக்கர வாகனத்தில் சென்ற மாணவிக்கு’... '... ‘அரசுப் பேருந்து மோதியதில் நேர்ந்த பரிதாபம்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Feb 08, 2020 03:08 PM

வேளாங்கண்ணி அருகே உறவினருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பள்ளிச் சிறுமி, அரசுப் பேருந்து மோதியதில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Female : School Student who died, in Government Bus Accident

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே பூக்காரத் தெருவைச் சேர்ந்த மகரஜோதி என்ற அந்தச் சிறுமி, உறவினர் வீரமணி என்பவருடன் பள்ளிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். சாலையின் வலதுபுறமாக சென்றுக்கொண்டிருந்த வீரமணி, பின்புறம் சரியாக கவனிக்காமல் இடதுபுறமாக சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது பின்னால் வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்து இருசக்கர வாகனத்தின் பக்கவாட்டில் மோதியது.

இந்த விபத்தில் பள்ளி மாணவி மகரஜோதி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட, வீரமணி காயங்களுடன் உயிர் தப்பினார். வீரமணி, மகரஜோதி இருவருமே தலைக்கவசம் அணியாமல் சென்றதும், பின்னால் வரும் வாகனத்தை கவனிக்காமல் சாலையைக் கடந்ததுமே விபத்துக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #ACCIDENT #SCHOOLSTUDENT #SCOOTY