VIDEO: பட்டப்பகலில் போலீஸ் ஸ்டேஷன் முன் கத்தியால் குத்திச் சண்டை.. அம்பத்தூர் அருகே பரபரப்பு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அம்பத்தூர் அருகே சாலையில் இருவர் கத்தியால் குத்துக்கொண்ட சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அம்பத்தூர் அருகே பெயிண்ட்டிங் வேலை செய்து வருபவர்கள் ராஜன் மற்றும் கோதண்டராமன். இருவரும் பணியாளர் தங்கும் விடுதியில் தங்கி வந்துள்ளனர். இந்த நிலையில் விடுதியில் தங்குவது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ராஜனின் மனைவி குறித்து கோதண்டராமன் தவறாக பேசியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த ராஜன், கோதண்டராமனை தாக்கியுள்ளார். பின்னர் இருவரும் அம்பத்தூர் காவல் நிலையம் அருகே நடுரோட்டில் ஒருவருக்கொருவர் கத்தியால் வெட்டிச் சண்டையிட்டுள்ளனர். இதில் படுகாயமடைந்த ராஜன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கோதண்டராமனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அம்பத்தூரில் காவல் நிலையில் எதிரே இருவர் கத்தியால் வெட்டிக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
