"ராமர் கோவில் கட்டும் பணியில் என்னால் ஈடுபட முடியாது..." "என் பெயர் தான் சாமி, ஆனால் நான் சாமியார் இல்லை...." 'சுப்பிரமணியன் சுவாமி' கருத்து...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Suriyaraj | Feb 08, 2020 11:03 AM

ராமர் கோவில் கட்டுவதற்கான பணியில் தான் ஈடுபடவில்லை என்றும், என் பெயர்தான் சாமி, நான் சாமியார் இல்லை என்றும் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

My name is Swami and I am not a Sami-Subramaniyan Swami

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ரஜினி பாஜகவிற்கு வந்தால் எதிர்க்க மாட்டேன் என்றும், ஆனால் பழைய சினிமா வசனங்களை பேசினால் கண்டிப்பாக எதிர்ப்பேன் என்றும் தெரிவித்தார். இந்து மதத்திற்காக பேசினால் மட்டுமே தான் ரஜினியுடன் இருப்பேன் என்றும் கூறினார். விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடைபெற்றது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அநியாயம் நடந்து இருந்தால் வழக்கு தொடரலாம் என்று பதிலளித்தார். பட்ஜெட் குறித்த தனது கருத்தை விரைவில் தெரிவிப்பதாக கூறினார்.

மேலும், "என் பெயர் சாமி ஆனால் நான் சாமியார் இல்லை; அரசியல் வாதி எனக் குறிப்பிட்ட அவர், ராமர்கோவில் கட்டப்பட்டால் ராமரின் ஆசிர்வாதம் பெற தான் அங்கு செல்வேன் எனக் குறிப்பிட்டார். தனக்கு நிதித்துறை அமைச்சர் பொறுப்பு அளிக்கப்பட்டால் பலகோடியை கடன் பெற்று வெளிநாடு தப்பிச் சென்றவர்களை பிடித்து கொடுப்பதாக கூறினார்.

Tags : #CHENNAI #AIRPORT #SUBRAMANIYAN SWAMI #RAJINIKANTH #VIJAY