‘6 வயது குழந்தையுடன் கிணற்றுக்குள் விழுந்த தாய்’.. குப்பை அள்ளும் வாகனத்தை ஓட்டும்போது நடந்த விபரீதம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Feb 10, 2020 01:40 PM

கள்ளக்குறிச்சி அருகே குப்பை அள்ளும் வாகனம் கிணற்றில் விழுந்ததில் 6 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

Garbage dump vehicle accident child death near Kallakurichi

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளுக்கு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் பேட்டரி வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனை அந்தந்த பகுதியில் உள்ள குப்பை அள்ளும் தொழிலாளர்கள் ஓட்டி பழகி வருகின்றனர். அதன்படி க. அலம்பலம் கிராமத்துக்கு வழங்கப்பட்ட பேட்டரி வாகனத்தை ஊருக்கு தெற்கு புறமாக உள்ள சாலையில் வனிதா என்ற தொழிலாளி ஓட்டி பயிற்சி செய்துள்ளார்.

அப்போது அந்த வாகனத்தில் தனது 6 வயது மகன் பாலாஜியையும் ஏற்றிக்கொண்டு பயிற்சியை மேற்கொண்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள கிணற்றில் விழுந்துள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனே தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் படுகாயங்களுடன் கிடந்த வனிதாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால் சிறுவன் பாலாஜி கிணற்றுக்குள் மூழ்கியதால் சுமார் 5 மணிநேர தேடுதலுக்குப்பின் சடலமாக மீட்கப்பட்டான். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : #ACCIDENT #MOTHER #SON #DIES