‘பாலத்தில் இருந்து பறந்து கீழே சென்ற கார் மேல் விழுந்த மற்றொரு கார்’.. காருக்குள் சிக்கி ஒருவர் பலியான பரிதாபம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாபாலத்தில் சென்றுகொண்டிருந்த கார் விபத்துக்குள்ளாகி கீழே சென்றுகொண்டிருந்த மற்றொரு காரின் மீது விழுந்ததில் ஒருவர் பரிதாபமாக பலியானார்.

மங்களூரை சேர்ந்த பிரவின் என்பவர் தனது நண்பர்களுடன் காரில் சென்றுகொண்டு இருந்துள்ளார். அப்போது நந்தூரிலிருந்து தோக்கொட்டுக்கு புதிதாக கட்டப்பட்ட பாலத்தின் மீது சென்றுகொண்டிருந்த கார் ஒன்று திடீரென விபத்துக்குள்ளாகியுள்ளது. பின்னர் பாலத்தில் உள்ள தடுப்பை உடைத்துக்கொண்டு கீழே விழுந்துள்ளது.
இதில் கீழே சாலையில் சென்றுகொண்டிருந்த பிரவீன் கார் மீது இந்த கார் விழுந்து நொருங்கியுள்ளது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பிரவீன் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த அவரது நண்பர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் பாலத்தில் இருந்து கீழே விழுந்த காரில் இருந்த இரண்டு பேரும் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
