‘பேருந்து இடுக்கில்’ சிக்கி ‘மனைவி மற்றும் 9 மாத குழந்தைக்கு’ .. கண்முன்னே நேர்ந்த சோகம்.. கதறித் துடித்த கணவர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Feb 07, 2020 11:40 AM

இந்தியா தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ளது வள்ளிநாயகபுரம். இப்பகுதியை சேர்ந்த வெங்கடேசபுரத்தைச் சேர்ந்தவர் காளியப்பன். 53 வயதான காளியப்பன் கூலித் தொழிலாளியாக இருந்து வருபவர்.

mother and 9 month old baby dead in accident near ottapidaram

இவருடைய மனைவி பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்ட நிலையில் இரண்டாவது ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். முதல் மனைவி மூலம் 2 மகள்களும், இரண்டாவது மனைவி மூலம் 3 மகன்களும் இருக்கும் நிலையில் கடைசி மகன் 9 மாத குழந்தை வெள்ளைச்சாமியை நேற்று காலையில்  மாலா தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்து காளியப்பனின் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது எதிரே தூத்துக்குடி விளாத்திகுளம் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.

இந்த பேருந்து தனது மோட்டார் சைக்கிள் மீது மோதி விடாமல் இருப்பதற்காக காளியப்பன் தனது இரு சக்கர வாகனத்தை சாலையோரம் நிறுத்தினார். ஆனால் அப்போது பார்த்து காளியப்பனின் பின்னால் இருந்து தூத்துக்குடி நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளின் மீது மோதியதில் காளியப்பன் நிலைதடுமாறி இடதுபுறமும், தனது 9 மாத கைக்குழந்தையுடன் வலது புறமும் விழுந்தனர். அப்போது பேருந்தின் சக்கரம் தாய் மற்றும் குழந்தையின் மீது ஏறி இறங்கியது.

இதில் தாய், மகள் இருவருமே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தனது கண்முன்னே மனைவியும் குழந்தையும் இறந்து கிடந்ததை பார்த்து காளியப்பன் கதறி அழுதுள்ளார். இந்த விபத்துச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, விபத்தில் பலியான தாய் மற்றும் குழந்தையின் உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து, இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags : #ACCIDENT