'கால் சென்ட்டர் நடத்திய இளைஞர்களால்’... ‘பரிதவித்துப்போன மக்கள்’... சென்னை நங்கநல்லூரில் அதிரவைத்த சம்பவம்... !

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Feb 07, 2020 05:56 PM

சென்னை நங்கநல்லூரில் போலி கால் சென்டர் நடத்தி, வங்கி கடன் வாங்கி தருவதாக, 10 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த 3 பெண்கள் உள்பட 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

6 Arrested by Central CB Police for Running Fake Call Center

சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த 3 இளம் பெண்கள் உள்பட, தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி செல்வபிரபு (29), அதே ஊரைச் சேர்ந்த வினோத் (28), நாகப்பட்டினத்தைச் சேர்ந்த செல்வகுமார் (28) ஆகியோர் நங்கநல்லூரில் ஐ கோர்வ் Solution என்ற கால் சென்டரை நடத்தி வந்துள்ளனர். கடந்த 3 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த இந்த கால் சென்ட்டரில், இவர்கள் தலைமையில் 40-க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் பணிபுரிந்து வந்துள்ளனர்.

இந்த இளம்பெண்களின் மூலம் சென்னை, மதுரை, கோவை என, பல்வேறு பகுதிகளில் வசிப்போரிடம், வங்கி கடன் வாங்கி தருவது போலவும், வங்கிகளில் இருந்து பேசுவது போலவும் தொடர்பு கொண்டு உள்ளனர். ஒரு லட்சம் ரூபாய் மட்டும், வங்கி கடன் வாங்கி கொடுத்தால் போதும் என்பவர்களிடம், 'உங்களுக்கு, 5 லட்சம் ரூபாய் வரை கடன் கிடைக்கும், அதற்கான தகுதி உள்ளது' என பேசியுள்ளனர். மேலும், தாங்களே வங்கி கடன் வழங்குவது போலவும், ஆசை காட்டிஉள்ளனர்.

அப்போது, தங்கள் வலையில் சிக்கும் நபர்களிடம், 5 லட்சம் ரூபாய் கடன் வழங்க, முன்பணமாக, 50 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என கூறி, அந்த பணம் தங்களுக்கு உடனடியாக கிடைக்கும் வகையில், பேடிஎம், கூகுல்பே உள்ளிட்ட, மொபைல் போன் செயலிகள் வாயிலாக வசூலித்ததாகத் தெரிகிறத. பணம் கொடுத்தோரிடம் கடன் தொகை, 15 நாட்களுக்குள் உங்கள் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என கூறியுள்ளனர். 15 நாட்களுக்கு பின், அவர்கள் தொடர்பு கொண்டால், உங்களுக்கு, வங்கிகள் கடன் கொடுக்க மறுத்து விட்டன. உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

நீங்கள் செலுத்திய முன்பணம், 45 நாட்களுக்குள் திரும்ப செலுத்தப்படும் என, நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளனர். அதற்கு பின், மொபைல் போன் எண்களை மாற்றி விடுவர். இந்த கும்பல் குறித்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து நடத்திய விசாரணையில் போலி கால்சென்ட்டர் மூலம் 10 கோடி ரூபாய்க்கு மேல் பொதுமக்களிடம் மோசடி செய்தது தெரியவந்துள்ளது. இதன்பிறகே, 3 பெண்கள் உள்பட செல்வபிரபு, செந்தில்குமார், வினோத் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த மோசடியில் வங்கி ஊழியர்கள் யாருக்கேனும் தொடர்புள்ளதா என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Tags : #POLICE #FAKE #CALL #CENTER #CHENNAI