'உங்க' சகவாசமே வேணாம்... 'முக்கிய' வீரர்களைக் கழட்டிவிட்டு... 'லக்கி' வீரருடன் களமிறங்கும் கேப்டன்?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநாளை நடைபெறவிருக்கும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா அணி நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது. தொடரை இழந்தாலும் நாளைய போட்டியில் வெற்றியை பெற கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நாளைய போட்டியில் கேப்டன் விராட் கோலி அதிரடியாக சில வீரர்களை கழட்டி விட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக தொடர்ந்து சொதப்பி வரும் பும்ரா, கேதார் ஜாதவ், மயங்க் அகர்வால் ஆகியோரைக் கழட்டிவிட்டு அவர்களுக்கு பதிலாக மணீஷ் பாண்டே (இவர் இருந்தால் கண்டிப்பாக இந்திய அணி வெற்றி பெற்று விடும் என்பதால் இவரை ரசிகர்கள் லக்கி வீரராக கருதுகின்றனர்) , மொஹம்மது ஷமி, ரிஷப் பண்ட் ஆகியோருடன் களமிறங்க வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.
இதனால் நாளைய போட்டியில் பண்ட் விக்கெட் கீப்பராகவும், கே.எல்.ராகுல், பிரித்வி ஷாவுடன் இணைந்து தொடக்க வீரராகவும் களமிறங்குவார் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது. எனினும் கேப்டனாக விராட் கோலி என்ன முடிவை எடுக்க போகிறார்? என்பது தெரியவில்லை. நாளை இந்திய அணி ஆறுதல் வெற்றியை பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
