‘என் பேரு பிரியானு சொன்னாங்க... ஒரு காலுக்கு ரூ 1000... போட்டோவுக்கு தனியாக பணம்’... ‘சென்னை’ போலீசாரை ‘அதிரவைத்த’ இன்ஜினியர்...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Feb 27, 2020 08:00 PM

பெண் குரலில் பேசி பல ஆண்களை ஏமாற்றி பணம் பறித்த இன்ஜினீயர் சென்னை போலீசாரிடம் அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Chennai Engineers Confession Who Cheated Using Female Voice

பெண் குரலில் பேசி மோசடியில் ஈடுபட்டுவந்த இளைஞர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், “என் பெயர் வளன் ராஜ்குமார் ரீகன் (27). எனக்கு இன்னும் திருமணமாகவில்லை. நான் இன்ஜினியரிங் படித்து முடித்ததும் தனியார் கம்பெனி ஒன்றில் பயிற்சியாளராக வேலை செய்தேன். பின்னர் உறவினருடைய நிறுவனம் ஒன்றிலும், என் அப்பாவுக்குத் தெரிந்த ஒருவரிடமும் வேலை செய்தேன். அதன் பிறகு அந்த வேலையை விட்டுவிட்டு புதிய வேலை தேடிவந்தேன். அப்போது லோக்கேன்டாவில் நான் பதிவு செய்திருந்ததைப் பார்த்து ஒரு கம்பெனியிலிருந்து என்னிடம் பேசியவர்கள், டெலி காலர் வேலை என்றும் வாடிக்கையாளர்களுக்குத் தேவையான வகையில் பேசினால் 500, 1000 ரூபாய் கமிஷன் வரும் என்றும் கூறினார்கள்.

மேலும் என்னுடைய குரல் பெண் போல இருப்பதால் லோக்கேன்டா இணையதளத்தில் பிரியா என்ற பெயரில் என் செல்போன் நம்பரை பதிவு செய்வதாகவும், என்னிடம் பேசும் ஆண்களிடம் பெண் குரலில் ஆபாசமாகப் பேச வேண்டும் எனவும் அவர்கள் கூறினார்கள். நானும் அதற்கு சம்மதித்து, எனக்கு போன் செய்த ஆண்களிடம் பெண் குரலில் பேசி பணம் சம்பாதித்து வந்தேன். அதில் சிலர் இலவசமாகப் பேசுமாறு என்னைத் தொந்தரவு செய்தார்கள். அதைப் பற்றி நான் கம்பெனியில் கூற அவர்கள் போலீசாரின் இணையதளத்தில் புகாரளிக்கும்படி தெரிவித்தார்கள்.

நானும் தொந்தரவு செய்யும் நபர்கள் மீது புகார் செய்து அதன் ஸ்கிரீன் ஷாட்டை அவர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்புவேன். உடனே அவர்கள் பயந்து புகாரை திரும்பப் பெற பணம் கொடுப்பார்கள். விளம்பரத்தைப் பார்த்து அழைக்கும் ஆண்களில் சிலர் என்னுடைய போட்டோவை அனுப்பும்படி கேட்பார்கள். அவர்களிடம் 100 ரூபாய் வாங்கிக்கொண்டு ஏதாவது ஒரு பெண்ணின் போட்டோவை அனுப்பி விடுவேன். என்னிடம் பெண் எனக் கருதி பேசும் ஆண்களில் பலரிடம் நான் எனக்கு தேவையானபோது வாட்ஸ்அப்பில் பேசி பணத்தைப் பெற்றுக்கொள்வேன். கடந்த 2 ஆண்டுகளாக இதுபோல பெண் குரலில் பேசி பணம் பறித்து வந்தேன். ஆனால் போலீஸார் என்னைப் பிடித்துவிட்டார்கள்” எனக் கூறியுள்ளார்.

Tags : #MONEY #POLICE #WHATSAPP #CHENNAI #ENGINEER