'நகை, புடவைகள்' விற்பனை பெயரில் 'வாட்ஸ்ஆப் குரூப்'... 'ஆசைப்பட்டு' இணைந்த 'பெண்களுக்கு'... குரூப் 'அட்மின்' அனுப்பிய 'வேறமாதிரி' படங்கள்...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Suriyaraj | Feb 26, 2020 09:10 AM

வாட்ஸ் ஆப்பில் பெண்களுக்கு ஆபாச படங்களை அனுப்பிய திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் தெலங்கானா போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

whatsapp crime thiruvannamalai youth arrested in hyderabad

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் அருண். பி இ பட்டதாரியான இவர், ஹைதராபாத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், நகை மற்றும் புடவைகள் விற்பனை செய்பவர் போல் வாட்ஸ்ஆப் குரூப் ஒன்றை உருவாக்கியுள்ளார். புது புது டிசைன்களில் புடவைகளும், நகைகளும் வாங்கலாம் என்ற ஆசையில் சில பெண்கள் அந்த குரூப்பில் இணைந்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் குரூப்பில் இணைந்துள்ள அழகான பெண்களுடன் அவர் பேச்சு கொடுத்துள்ளார். பின்னர் அவர்களுக்கு ஆபாச புகைபடங்களை அனுப்பியுள்ளார். மேலும் பாலியல் உறவுக்கு அவர் அழைத்துள்ளார். இதனால் எரிச்சலடைந்த பெண்கள் போலீசில் புகார் அளித்தனர்.

இதையடுத்து விசாரணையை தொடங்கிய சைபர் கிரைம் போலீசார், மாணிக்கத்தை கையும் களவுமாக பிடித்து சிறையில் அடைத்தனர்.

Tags : #WHATSAPP #TELANGANA #HYDERABAD #YOUTH ARREST