'தங்கச்சிய' லவ் பண்ணேன்... என்ன 'கல்யாணம்' பண்ணிக்கன்னு டார்ச்சர் பண்ணா அதான்... 'கடலூரில்' இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Feb 27, 2020 12:14 PM

முறை தவறிய காதலால் கடலூரில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

26 year Woman murdered near Cuddalore, Police Investigate

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியை சேர்ந்தவர் எழில்(26) இவரும் சேத்தியாதோப்பு பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார்(28) என்பவரும் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்தனர். சுரேஷ்குமாரின் சித்தி மகள் தான் எழில். இருவரும் அண்ணன்-தங்கை முறை என்றாலும் கூட காதல் இவர்கள் கண்ணை மறைத்து விட்டது.

இந்த நிலையில் வழக்கம்போல நேற்று மதியம் இருவரும் வீட்டில் தனியாக இருந்து பேசிக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் சுரேஷ்குமார், எழிலை கொலை செய்து விட்டு தப்பித்து ஓடிவிட்டார். மாலை வீடு திரும்பிய எழிலின் பெற்றோர் எழில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ந்து போய் போலீசில் புகார் செய்தனர்.

தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் எழிலின் உடலை கைப்பற்றி விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் சுரேஷ்குமார் கொலையாளி என்பது தெரிய வந்தது. தொடர்ந்து அவரை தீவிரமாக தேடி பஸ் ஸ்டாப்பில் பேருந்துக்காக காத்திருந்தவரை கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

எழிலை கொலை செய்ததை சுரேஷ்குமார் ஒப்புக்கொண்டார். இதுகுறித்து அவர், '' என்னுடைய அம்மாவின் தங்கை மகள் தான் எழில். இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். சமீபகாலமாக அவர் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி வந்தார். நாம் இருவரும் அண்ணன்-தங்கை முறை திருமணம் செய்துகொள்ள முடியாது என்று கூறினேன்.

ஆனால் அவள் திருமணத்துக்கு தொடர்ந்து வற்புறுத்தினாள். இல்லையெனில் போலீசில் இதுகுறித்து புகார் செய்வேன் என்று மிரட்டினாள். இதனால் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. அவளை கழுத்தை நெரித்து கொலை செய்தேன். உடலை கட்டிலுக்கு அடியில் கிடத்திவிட்டு அந்த இடத்தில் இருந்து சென்று விட்டேன். ஆனால் போலீசார் என்னை துப்புதுலக்கி கண்டுபிடித்து விட்டனர்,'' என்றார்.

தற்போது சுரேஷ்குமாரை கைது செய்த போலீசார் தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கடலூர் பகுதியை அதிர வைத்துள்ளது.