தேனி அருகே பயங்கரம்... 'பெற்ற மகள்' என்றும் பாராமல் 'தந்தை' செய்த கொடூரம்... தடுக்க முயன்ற 'மனைவிக்கு' கொலை மிரட்டல்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Feb 26, 2020 12:28 PM

பெற்ற மகள் என்றும் பாராமல் குடிபோதையில் 15 வயது சிறுமியை, தந்தையே பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Father arrested by police in Pocso Act Near Theni District

தேனி மாவட்டம் அல்லிநகரம் பகுதியை சேர்ந்தவர் மகேஷ்(41) பழ வியாபாரம் செய்து வருகிறார். குடிக்கு அடிமையான இவர் தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வருவதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார். சம்பவ தினத்தன்று குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த மகேஷ் மனைவி கீதாவுடன் சண்டை போட்டுள்ளார்.

குடிபோதையில் தன்னுடைய 15 வயது மகளையும் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி, மகேஷை தடுக்க அவரை கொலை செய்து விடுவதாக மகேஷ் மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து அவரது மனைவி அல்லிநகரம் போலீசில் புகார் செய்ய, போலீசார் வழக்குப்பதிவு செய்து போக்ஸோ சட்டத்தின் கீழ் மகேஷை கைது செய்தனர்.