‘பிரியாணி சாப்பிட்டுவிட்டு கள்ளக்காதல் ஜோடி எடுத்த விபரீத முடிவு!’.. 2 மனைவிகளின் கணவருக்கு நேர்ந்த பரிதாபம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள திருப்பத்தூர் கண்டரமாணிக்கம் வளையப்பட்டி பகுதியில் வசித்து வந்த 33 வயதானவர் சுப்பையா. இந்த சுப்பையாவுக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். இரண்டாவது மனைவிக்கு 2 குழந்தைகளும் உள்ளனர்.

இந்நிலையில் பணி நிமித்தமாக திருப்பூரில் வேலை செய்துவந்த சுப்பையாவுக்கு அதே ஊரைச் சேர்ந்த மூர்த்தி என்பவரது மகள் மீனாவுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கத்தை தொடர்ந்து மீனாவின் பெற்றோர் மீனாவை தம் ஊருக்கு அழைத்துச் சென்றனர். தவிர சுப்பையாவின் நடவடிக்கையால் அதிருப்தி அடைந்த மீனாவின் பெற்றோர் கண்டரமாணிக்கம் போலீசாரிடம் புகார் அளித்தனர். இந்த புகாரை ஏற்ற போலீஸார் போலீசார் போக்சோ சட்டத்தில் சுப்பையா மீது வழக்குப்பதிவு செய்தனர். இதனிடையே மீனாவை அவரது பெற்றோர் காரைக்குடி அருகே உள்ள சங்கராபுரத்தில் உள்ள மீனாவின் தாத்தா வீட்டில் தங்க வைத்தனர். இந்நிலையில் நேற்றைய தினம் மீனாவின் தாத்தா திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக வெளியூர் சென்ற நேரம் பார்த்து அங்கு சென்ற சுப்பையா இரவு 10 மணி அளவில் மீனாவை ஆசை வார்த்தை கூறி முந்திரி காட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு இருவரும் பிரியாணி சாப்பிட்டு உல்லாசமாக இருந்துள்ளனர். இதனையடுத்து இனி ‘நாம் இருவரும் சேர்ந்து வாழ முடியாது’ என்று பேசிக்கொண்ட தம்பதியினர் ‘சேர்ந்து சாகலாம்’ என்கிற முடிவினை எடுத்துள்ளனர். இதற்கென இருவரும் குருணை மருந்தை உட்கொண்டுள்ளனர். ஆனால் குருணை மருந்தை உட்கொண்ட பின்னர் மீனா தன்னுடைய வீட்டில் உள்ளவர்களுக்கு போன் செய்து தகவல் தெரிவித்துவிட்டார். உடனே அங்கு விரைந்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்று சேர்த்துள்ளனர். ஆனால் வழியிலேயே சுப்பையா இறந்துவிட்டதாக கூறிய மருத்துவர்கள் மீனாவுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது தொடர்பாக சோமநாதபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
