ஒரே ஒரு 'வாட்ஸ் அப் குரூப்' தான்... செமத்தியா காசு பாத்துட்டாரு... அப்படி என்ன பண்ணாரு?

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manishankar | Feb 26, 2020 12:18 PM

வாட்ஸ் அப் குழு தொடங்கி பல லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

salem youngster cheats money through whats app

சேலம் காடையாம்பட்டியில் வசித்து வந்த மணிகண்டன் என்பவர் அதே பகுதியில் புரோகிதர் பணி செய்து வந்தார். அவர் வாட்ஸ் அப் குழு ஒன்றை தொடங்கி அர்ச்சனை செய்வது குறித்து பாடம் நடத்தி அதற்கான சான்றிதழும் வழங்கப்படும் என கூறியுள்ளார். இந்நிலையில், இவற்றை நம்பி தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவர் 55 ஆயிரம் ரூபாய் செலுத்தியுள்ளார்.

ஆனால், மணிகண்டன் பல மாதங்களாக சான்றிதழ் கொடுக்கமல் ஏமாற்றி வந்துள்ளார். பிறகு, முருகேசன் நேரில் சென்று கேட்ட போது மணிகண்டன் சான்றிதழ் தராமல் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, அளிக்கப்பட்ட புகாரில் மணிகண்டன் கைது செய்யப்பட்டார். மேலும், அவர் இது போல பல இளைஞர்களிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்ததிருப்பது போலீஸ் விசாரணையில் அம்பலமானது.

இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.