'கலவர' பூமியில் காக்கப்பட்ட 'உயிர்கள்'... "அவர்கள் மட்டும் வரவில்லை என்றால்..." 'கண்ணீரால்' நன்றி சொல்லும் '80 குடும்பங்கள்'...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Suriyaraj | Feb 27, 2020 08:54 AM

டெல்லி கலவரத்தின் போது சுமார் 80 குடும்பங்களை போலீசார் பத்திரமாக மீட்டு காவல்நிலையத்தில் தங்க வைத்ததால் அவர்கள் அனைவரும் உயிர் பிழைத்தனர்.

delhi police save 80 families amid two days of protest

டெல்லியின் வடகிழக்கு பகுதிகள் வன்முறையால் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. கடந்த செவ்வாய்க்கிழமை காலை வீட்டைவிட்டு வெளியேற முடியாத அளவுக்கு வன்முறை உச்சத்தில் இருந்தது. வன்முறையை கட்டுப்படுத்த காவல்துறை தவறிவிட்டதாக கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன.  இந்நிலையில், வன்முறைகளுக்கிடையே காவலர்கள் கோகுல்பூரி பகுதியில் வசிக்கும் சுமார் 80 குடும்பங்களைப் பத்திரமாக மீட்டு காவல்நிலையத்தில் தங்க வைத்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.

தாங்கள் மீட்கப்படவில்லை என்றால் இன்று உயிரோடு இருப்பதே சந்தேகம் தான் என மீட்கப்பட்டவர்கள் குறிப்பிட்டுள்ளனர். மீட்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் இந்தச் சம்பவத்தை நினைவுகூர்ந்த போது "மஜ்பூர் மற்றும் பாபர்பூர் பகுதிகளில் கடந்த திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் வன்முறை வெடித்ததைத் தொடர்ந்து சில வதந்திகள் எங்களைச் சுற்றி வந்தன. சிலர் எங்களது வீடுகளைத் தாக்கினர். காவல்துறையினருக்கு இதுதொடர்பாகத் தகவல்களைத் தெரிவித்தோம். அவர்கள் சரியான நேரத்துக்கு வரவில்லை என்றால், நாங்கள் இன்று பிழைத்திருக்க மாட்டோம்"   எனத் தெரிவித்தார். 

காவல்துறையினரின் இந்த செயலுக்கு மீட்கப்பட்டவர்களின் உறவினர்களும் நன்றி தெரிவித்துள்ளனர்.

Tags : #DELHI #RIOT #POLICE #SAVE #80 FAMILIES