‘தலை தனியே.. உடல் தனியே’.. நாயால் வெளிச்சத்துக்கு வந்த சடலம்..சேலத்தை நடுங்கவைத்த சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Feb 26, 2020 12:13 PM

சேலம் செட்டிச்சாவடி செல்லும் வழியில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபரின் தலை மற்றும் கை வெட்டப்பட்டு, உடல் அழுகிய நிலையில் கிடைத்தது.

நாயால் வெளிச்சத்துக்கு வந்த சடலம் dead body found in salem

இந்த சடலத்தின் கையை நாயொன்று கவ்வி எடுத்துச் சென்ற போதுதான் மக்கள் பார்த்து அதிர்ந்தனர். பின்னர் நாயை துரத்தியபோது கையை சாலையிலேயே போட்டுவிட்டு நாய் ஓடியது. அதன் பின்னர் மக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். இந்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த காவல்துறையினர் 30 வயது மதிக்கத்தக்க வாலிபரின் சடலம் ஒன்று அங்கிருந்த முட்புதருக்குள் இருந்ததையும், அதற்குரிய தலையையும் தேடி கண்டுபிடித்ததோடு இறந்தவர் குறித்து விசாரித்தனர்.

பின்னர் இறந்தபோன வாலிபர் பற்றி முழுமையான தகவல் தெரியவில்லை என்றும் வாலிபரை வேறோரிடத்தில் கொடூரமான முறையில் யாரோ கொலை செய்துவிட்டு இந்த பகுதிக்கு கொண்டு வந்து  குழப்ப வேண்டும் என்பதற்காக உடலையும் தலையையும் தனித்தனியே வீசி சென்றிருக்கலாம் என்றும் கூறிய போலீசார், இறந்தவர் யார் அவரை கொலை செய்தவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.

வாலிபரின் உடல் இருந்த பகுதிக்கு சற்று அருகில் தான் தனியார் ஏற்றுமதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. சுமார் 300க்கும் மேற்பட்ட வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் பணிபுரிந்து வரும் இந்த நிறுவனத்தில் காணாமல் போனவர்கள் குறித்த தகவல்களையும் சேகரித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags : #MURDER #POLICE #CRIME