‘ராங் நம்பர்’ மூலம் அறிமுகமான இளைஞர்.. கணவருக்கு தெரியாமல் மனைவி செய்த காரியம்.. வெளியான பகீர் வாக்குமூலம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Feb 26, 2020 11:27 AM

கள்ளக்காதலனுடன் தனிமையில் இருந்ததைப் பார்த்த மாமியாரை மருமகள் கொலை செய்த சம்பவம் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Bengaluru Woman, paramour arrested for mother in law’s murder case

பெங்களூரு பேடராயனபுரா பகுதியில் வசித்து வருபவர் ராஜம்மா (60). இவர் கடந்த 19ம் தேதி தன்னுடைய வீட்டில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். மேலும் அவருடையை நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தன. இதனால் மர்ம நபர்கள் யாராவது நகைக்காக கொலை செய்திருக்கலாம் என போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் ராஜம்மாவின் மருமகள் சௌந்தர்யாவின் (21) நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார். பின்னர் போலீசார் கிடுக்குப்பிடி கேள்விகளை எழுப்பியுள்ளனர். அப்போது தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து மாமியரை கொலை செய்ததாக திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார்.

ராஜம்மாவின் மகன் குமார் (26), இவருக்கும் சௌந்தர்யாவுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில் சௌந்தர்யா உறவினர் ஒருவருக்கு போன் செய்துள்ளார். ஆனால் அது தவறான அழைப்பாக நவீன் ஜடேசுவாமி (25) என்பவருக்கு சென்றுள்ளது. உடனே சௌந்தர்யா அழைப்பை துண்டித்துள்ளார். பின்னர் நவீன் அதே எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார். நவீனின் பேச்சில் மயங்கிய சௌந்தர்யா தொடர்ந்து அவருடன் அடிக்கடி பேசி வந்துள்ளார். இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

இதனை அடுத்து சௌந்தர்யாவும், நவீனும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். மேலும் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அடிக்கடி நவீனை அழைத்து சௌந்தர்யா தனிமையில் இருந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று மாமியார் ராஜம்மா வெளியூர் சென்றுள்ளார். கணவர் குமாரும் வழக்கம்போல வேலைக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் நவீனுக்கு போன் செய்து வீட்டுக்கு வருமாறு சௌந்தர்யா அழைத்துள்ளார். இதனை அடுத்து இருவரும் வீட்டில் தனிமையில் இருந்துள்ளனர். அப்போது வீட்டுக்கு வந்த ராஜம்மா, தனது மருமகள் வேறொருவருடன் தனிமையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர் இருவரையும் கடுமையாக திட்டிவிட்டு தனது மகனிடம் சொல்லப்போவதாக கூறியுள்ளார்.

இதனால் பயந்துபோன அவர்கள் இரும்பு கம்பியால் ராஜம்மாவை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து நகைக்காக கொலை நடந்ததுபோல சித்தரிக்க முடிவு செய்து, ராஜம்மாவின் நகைகளை நவீன் கழற்றிச் சென்றுள்ளனர். இந்நிலையில் இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : #CRIME #MURDER #BENGALURU #POLICE #AFFAIR #WOMAN