'வேற வழியே இல்ல' மொத்தமா 3 பேரை... 'கட்டம்கட்டி' தூக்கப்போகும் கேப்டன்... யாருன்னு பாருங்க!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Feb 27, 2020 07:56 PM

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியைத் தழுவியதால் இந்திய அணி ஐசிசியின் புள்ளிப்பட்டியலில் இருந்து சரிந்துள்ளது. கோலி தன்னுடைய நம்பர் 1 இடத்தை இழந்துள்ளார். ரசிகர்கள் மத்தியில் இந்திய அணி மிகவும் மோசமான விமர்சனங்களுக்கு உள்ளானது. இதனால் அடுத்த போட்டியில் வெல்வது தவிர வேறு வழியில்லை என்னும் கட்டாயத்தில் இந்திய அணி விராட் தலைமையில் வருகின்ற 29-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு களம் காணவுள்ளது.

IND Vs NZ: Jadeja, Saha maybe get chance in the 2nd test

இந்த நிலையில் மோசமான பார்ம் மற்றும் பேட்டிங் ஆகியவை காரணமாக அடுத்த போட்டியில் இருந்து 3 முக்கிய வீரர்களை விராட் கோலி நீக்கலாம் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அந்த 3 பேர் யார் என்பதை கீழே பார்க்கலாம்.

1. ரிஷப் பண்ட்- விருத்திமான் சஹா

முதலாவது டெஸ்ட் போட்டியில் சஹாவுக்கு பதிலாக பண்ட் இறங்கியது ரசிகர்கள் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் ஆகியவற்றில் பண்ட் சிறப்பாக செயல்பட்டார் என்றாலும் 2-வது போட்டியில் வெற்றி கட்டாயம் என்பதால் உலகின் சிறந்த விக்கெட் கீப்பர்களில் ஒருவர் என்று புகழப்படும் சஹாவுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது.

2. ரவீந்திர ஜடேஜா - ஹனுமான் விஹாரி

கடந்த டெஸ்ட் போட்டியில் பேட்டிங்கில் பெரிதாக கைகொடுக்காமல் விஹாரி பயங்கரமாக சொதப்பினார். தனக்கு கிடைத்த வாய்ப்பை தக்க வைத்துக்கொள்ள அவர் தவறியதாலும், பேட்டிங்கில் ஒரு நீண்ட வரிசை வேண்டும் என்பதாலும் விஹாரிக்கு பதிலாக ஜடேஜாவுக்கு கோலி வாய்ப்பு வழங்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அஸ்வின் கடந்த போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதால் அஸ்வின், ஜடேஜாவுக்கு வாய்ப்பளித்து விஹாரியை , கோலி பெஞ்சில் அமர வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

3. சுப்மன் கில் - பிரித்வி ஷா

2 இன்னிங்ஸ்களிலும் ஓபனிங் இறங்கிய பிரித்வி ஷா அடித்து ஆடினாலும் விரைவில் விக்கெட்டை இழந்து விடுகிறார். இதனால் இந்திய ஏ அணிக்கு எதிராக சதமடித்து அசத்திய சுப்மன் கில்லுக்கு 2-வது டெஸ்ட் போட்டியில் இடம் கிடைக்கும் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதற்கு ஏற்றவாறு பிரித்வி ஷா பயிற்சிகளில் ஈடுபடாமல் சுப்மன் கில் வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.