"சார்... அண்டாவுக்கு முதல்ல பாதுகாப்பு குடுங்க சார்..." "இப்பல்லாம் தங்கத்தை விட இதுக்குத்தான் மதிப்பு அதிகம் சார்..." 'நூதன' மனுவால் திகைத்துப் போன 'போலீசார்'...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Suriyaraj | Feb 27, 2020 07:03 AM

குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக பாஜக சார்பில் நடைபெறும் பேரணியின் போது பிரியாணி அண்டாவுக்கு பாதுகாப்பு வேண்டி திருப்பூர் காவல் நிலையத்தில் பிரியாணி கடை உரிமையாளர்கள் மனு அளித்ததைக் கண்டு போலீசார் திகைத்துப் போயினர்.

bjp rally biriyani stall owners requested to police for security

விஐபி-க்களுக்கு பாதுகாப்பு, விலையுயர்ந்த பொருட்களுக்கு பாதுகாப்பு, திருவிழாவிற்கு பாதுகாப்பு, போராட்டத்திற்கு பாதுகாப்பு என மனு அளிப்பதை கேள்விப் பட்டிருப்போம். ஆனால் சற்று வித்தியாசமாக பிரியாணி அண்டாவுக்கு பாதுகாப்பு கோரி மனு அளித்ததைக் கண்ட போலீசார் சற்று திகைத்துதான் போயினர்.

குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக பாஜக சார்பில் நாளை பேரணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேரணியின்போது, பிரியாணி அண்டா திருடு போய்விடாமல் பாதுகாப்பு தர வலியுறுத்தி, திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் பிரியாணி கடை உரிமையாளர்கள் சார்பாக மனு அளிக்கப்பட்டுள்ளது.

கோவையில் கொல்லப்பட்ட சசிகுமார் என்ற இந்து முன்னணி பொறுப்பாளரின் இறுதி ஊர்வலத்தில் பிரியாணி அண்டா திருடப்பட்ட சம்பவத்தை அடுத்து, திருப்பூரில் இப்பேரணி நடைபெற உள்ளதால் அண்டாவுக்கு பாதுகாப்பு கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளதாக கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

Tags : #THIRUPUR #BIRIYANI #BJP RALLY #SHOP OWNERS #REQUESTED #POLICE