'தம்பி உங்கள வேலைய விட்டு தூக்குறோம்'... 'நொறுங்கி போன இளைஞர்'... சென்னையில் நடந்த கோரம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Feb 26, 2020 01:52 PM

சென்னையில் 12 வருடங்களாக ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்த இளைஞரை, வேலையை விட்டு நீக்கியதால் அந்த இளைஞர் தற்கொலை செய்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Chennai : Youth hangs self after losing his job

ஆவடி அடுத்த வீராபுரம் பகுதியை சேர்ந்தவர் கணேஷ். 30 வயது இளைஞரான இவர் கடந்த 12 ஆண்டுகளாக ஆவடியில் உள்ள கனரக வாகன தொழிற்சாலையில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வந்தார். இந்நிலையில்  கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரை தொழிற்சாலை நிர்வாகம் பணியிலிருந்து நிறுத்திவிட்டதாக தெரிகிறது. அதற்கான காரணமும் அவருக்கு தெரியவில்லை.

இந்நிலையில் 12 வருடங்களாக வேலை செய்து வந்த நிறுவனத்தில் இருந்து நீக்கப்பட்டது அவரை வேதனையின் உச்சத்தில் தள்ளியது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர், வீட்டில் உள்ளவர்களிடம் சோகத்தில் அழுது புலம்பியுள்ளார். இதற்கு வீட்டில் உள்ளவர்கள் ஆறுதல் கூறியும், சமாதானம் அடையாத கணேஷ் தொடர்ந்து விரக்தியில் இருந்து வந்துள்ளார். இதற்கிடையே நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து, வீட்டில் இருந்த  புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சம்பவம் குறித்து அறிந்த காவல்துறையினர் கணேஷின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வேலை பறிபோன விரக்தியில் இளைஞர் தற்கொலை செய்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #SUICIDEATTEMPT #JOBS #CHENNAI #HANG