'இஸ்லாமியர்கள்' போராட்டத்திற்கு சமைத்துக் கொடுக்கும் 'இந்துக்கள்'... இந்து பெண்ணுக்கு 'வளைகாப்பு' நடத்திய இஸ்லாமிய 'பெண்கள்'... 'தாம்பூலப்' பையில் எழுதப்பட்ட 'நெகிழ்ச்சி வாசகம்'...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Suriyaraj | Feb 27, 2020 07:20 AM

சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்களால் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்ட மேடையில் பாக்கியலட்சுமி என்ற இந்துப் பெண்ணுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது அனைவரையும் கவர்ந்தது.

Islamists who took baby shower for a Hindu woman

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகவும், என்.ஆர்.சி, என்.பி.ஆர் உள்ளிட்ட நடைமுறைகளை எதிர்த்தும் வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 'சென்னையில் ஒரு ஷாகின்பாஃக்’ என்ற முழக்கத்துடன் போராட்டத்தை  இஸ்லாமியர்கள் முன்னெடுத்துள்ளனர். கடந்த 14-ம் தேதி போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு தடியடியில் முடிவடைந்ததை அடுத்து இப்போராட்டம் தொடர் போராட்டமாக மாறியது.

அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இஸ்லாமியர்களுக்கு அப்பகுதியில் உள்ள இந்து மக்கள் உணவு சமைத்துக் கொடுத்து ஆதரவு தெரிவிப்பது உள்ளிட்ட நெகிழ்ச்சியான சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் போராட்டம் நடைபெறும் மேடையில் இந்து மதத்தைச் சார்ந்த பாக்கியலட்சுமி என்ற கர்பிணி பெண்ணிற்கு இந்து முறைப்படி வளைகாப்பு நடந்தது. போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இஸ்லாமிய பெண்கள், பாக்கியலட்சுமிக்கு வளையல் அணிவித்தும், அட்சதை தூவியும் வாழ்த்தினர். இப்போராட்டம் பிற மதத்தினருக்கு எதிரானது அல்ல என்ற புரிதலை ஏற்படுத்தும் விதமாக நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது.

மேலும், வளைகாப்பு விழாவில் வழங்கப்பட்ட தாம்பூலப் பையில் “இஸ்லாமியர்கள் அனைவரும் எங்கள் தொப்புள்கொடி உறவுகளே” என்ற வாசகம் அச்சிடப்பட்டிருந்தது அனைவரையும் நெகிழச்செய்தது.

Tags : #CHENNAI #WASHERMANPET #CAA PROTEST #HINDUWOMEN #BABY SHOWER